News March 13, 2025

BREAKING: சென்னையில் குடும்பமே தற்கொலை

image

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக, டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். 4 பேரின் உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 13, 2025

பெரியாரை வைத்தே திமுகவை வீழ்த்த பார்க்கிறதா பாஜக? (2/2)

image

TNல் 1967ல் ஆட்சியைப் பிடித்த திராவிட சித்தாந்தம் இன்று ஆலமரமாக பரவியிருக்கிறது. புதிதாக எந்த கட்சி உதயமானாலும், திராவிடம் என்ற கருப்பொருள் நிச்சயம் இருக்கும். அதற்கு விஜய்யும் விதிவிலக்கல்ல. ஆனால், மாற்றுக் கருத்தியல் கட்சியான பாஜக, அந்த கட்டமைப்பை உடைக்கும் அரசியலை தொடங்கியிருக்கிறது. பெரியாரை வைத்தே திமுகவை மடக்க, தமிழை கையில் எடுத்திருக்கிறது பாஜக என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து (2/2)

News March 13, 2025

இந்தியில் வாடிக்கையாளர் சேவையா?

image

இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் எரிவாயு விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து புகார் அளித்தால், இந்தியில் பதிலளிக்கப்படுகிறதாம். இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், உடனே தமிழில் சேவை வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

News March 13, 2025

ரிஷப் பண்ட் வீட்டில் விசேஷம்.. வைரல் போட்டோஸ்

image

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் தங்கை திருமணத்தின் போது, எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாக்ஷி பண்டிற்கு லண்டன் தொழிலதிபர் அங்கித் சவுத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. டேராடூனில் ஒரு சொகுசு ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு தோனி, ரெய்னா, பண்ட் ஆகியோர் டான்ஸ் ஆடிய வீடியோ தான் நேற்று இணையத்தில் வைரலானது.

error: Content is protected !!