News October 4, 2025

BREAKING: இபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு

image

நாளை திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், நாளை மறுநாள் நாமக்கல், பரமத்திவேலூரிலும் ரோடு ஷோ செல்ல இபிஎஸ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கரூர் துயர வழக்கில் நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, இபிஎஸ் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து, பரப்புரை கூட்டத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.

Similar News

News March 18, 2026

அதிமுக கதையை முடிச்சுட்டாங்க : OPS

image

EPS & உடன் இருப்பவர்களும் அதிமுக கதையை முடித்துவிட்டதாக OPS பேசியுள்ளார். <<19406314>>சி.வி.சண்முகத்தின் சர்ச்சை<<>> பேச்சு குறித்த பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த OPS, கட்சியை அவர்கள் அந்த நிலையில் வைத்துள்ளதாகவும், கட்சியைப் படுகுழியில் தள்ளி, எந்த காலத்தில் எழுந்திருக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறினார். மேலும், அவர்கள் தொடர்பாக இனி தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

News March 18, 2026

விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

image

மனிதக் கழிவுகளை செவ்வாய் மற்றும் நிலவில் உரமாக பயன்படுத்த முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ‘ACS Earth and Space Chemistry’ இதழின் ஆய்வில் விண்வெளியில் உள்ள வளமற்ற மண்ணை, தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற வளமான மண்ணாக மாற்ற மனித கழிவு உதவுவது தெரியவந்துள்ளது. நிலவில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரும் சூழலில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News March 18, 2026

ராசி பலன்கள் (18.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!