News April 24, 2024

BREAKING: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ விளக்கம்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைக் கணக்கிடுவதில் மாறுபாடு நிகழ்ந்தது ஏன்? என்று தேர்தல் அதிகாரி சாகு முதல்முறையாக விளக்கமளித்துள்ளார். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் தவறு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால், செயலியில் கிடைத்த தகவலை அறிவித்ததாக விளக்கமளித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

பிக்பாஸ் ஃபைனல்.. TTF வின்னர் இவரா?

image

பிக்பாஸ் தமிழ் முடிவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், Ticket to Finale போட்டிகள் சூடுபிடித்துள்ளன. ஏழு டாஸ்க்கின் முடிவில் சபரி, சாண்ட்ரா, அரோரா முன்னிலை வகித்தனர். இறுதிக்கட்ட கார் டாஸ்க்கில் ஆரோரா, பார்வதி, கம்ரூதின் கடும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆரோரா 2 புள்ளிகள் முன்னிலையுடன் இருப்பதால், அவர் TTF ஜெயித்து ஃபைனலுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News January 2, 2026

2026-ன் முதல் சூப்பர்மூன் எப்போது தெரியுமா?

image

இந்தாண்டின் முதல் சூப்பர்மூன் இன்று தெரியும். அதேபோல், ஜனவரி 3-ம் தேதி அதைவிட பெரிய நிலவான ‘Wolf Supermoon’ தோன்றும். இது, வழக்கத்தை விட 15% பெரிதாகவும், 30% பிரகாசமாகவும் இருக்கும். இந்த அற்புதமான காட்சியை நேரடியாக காணலாம். கடந்தாண்டு அக்., நவ., டிச., ஆகிய மாதங்களில் சூப்பர்மூன் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இன்று சூப்பர்மூன் பார்க்க தவறினால், நீங்கள் நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

News January 2, 2026

ஜன.5-ல் கூட்டணி முடிவை எடுக்கும் பிரேமலதா

image

ஜனவரி 5-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று பிரேமலதா அறிவித்துள்ளார். இதுவரை, தேமுதிக கூட்டணி குறித்த முடிவை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் நிலையில், DMK அல்லது ADMK கூட்டணியில் தேமுதிக இணையுமா அல்லது தவெகவுடன் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!