News September 19, 2025
BREAKING: விஜய் வீட்டில் அதிகாலையில் பரபரப்பு

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்த இளைஞரால் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையங்களை தாண்டி வீட்டின் மொட்டை மாடிக்கு அந்த இளைஞர் சென்றது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு உள்துறை அமைச்சகம் அவருக்கு ‘Y’ பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 28, 2026
விரக்தியாக இருந்தால் இதை செய்யலாம்!

நீங்கள் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ உணரும்போது, அதை மற்றவர்கள் மீது காட்டாமல் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, பொருள்களை நேர்த்தியாக அடுக்கி வைப்பது ஆகியற்றை செய்வதன்மூலம் ரிலாக்ஸ் ஆகலாம். இது வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு உங்கள் கோபத்தை போக்கவும் உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
News March 28, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 646 ▶குறள்: வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். ▶பொருள்: மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
News March 28, 2026
₹2.38 லட்சம் கோடிக்கு ஆயுதம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC, ₹2.38 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதில் போக்குவரத்து விமானங்கள், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன்கள், டாங்கி எதிர்ப்பு அமைப்புகள், தொலைவிலிருந்து இயக்கப்படும் தாக்குதல் விமானங்கள், தனுஷ் துப்பாக்கி அமைப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்பு ஆகியவை அடங்கும்.


