News September 14, 2025

BREAKING: தசரா விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

image

குலசை தசரா திருவிழா இன்னும் 10 நாள்களில் தொடங்கவுள்ளது. அதனையொட்டியும், தீபாவளியை முன்னிட்டும் 3 மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மைசூரு – நெல்லை இடையே நாளை முதல் நவ.24 வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், நாளை முதல் அக்.27 வரை மைசூரு – ராமநாதபுரம் இடையேயும், செப்.18 – நவ.29 வரை மைசூரு – காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

Similar News

News September 14, 2025

Beauty: வழுக்கையிலும் முடி வளர இந்த ஒரு விஷயம் போதும்

image

ஆண்களே, முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் இளம்வயதிலேயே வழுக்கை விழுகிறதா? அதனை சரி செய்ய, ➤விளக்கெண்ணெய்யை சூடுபடுத்தி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து, அதை 3 நாள்களுக்கு ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்யவும். ➤10 நிமிடங்கள் லேசான மசாஜ் செய்து, அரை மணிநேரம் ஊறவிடுங்கள். ➤பிறகு தலைக்கு குளித்துவர வழுக்கை விழுந்த இடங்களில் முடி வளரும். அனைத்து ஆண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News September 14, 2025

₹100 கோடியை நெருங்கும் ‘மதராஸி’..!

image

AR முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படம், தியேட்டரில் வசூல் வேட்டையாடி வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமின்றி வெளியான இப்படத்தின் கலெக்‌ஷன், தற்போது ₹100 கோடியை நெருங்கியுள்ளதாம். மொத்தமாக ₹88 கோடியை வசூலித்துள்ள ‘மதராஸி’ படம், தமிழகத்தில் மட்டும் ₹50 கோடியை கடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதராஸி படம் உங்களுக்கு பிடித்திருந்ததா?

News September 14, 2025

கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி

image

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா- பாக் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு நமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த பாக்.குடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!