News August 28, 2025
BREAKING: தமிழக அரசில் அதிரடி மாற்றம்

TN-ல் 7 IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.*திட்டம், வளர்ச்சி துறை செயலாளர்-சஜ்ஜன்சிங் ரா சவான். *மாநில தேர்தல் ஆணைய செயலாளர்-ஸ்ரீவெங்கடபிரியா. *மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளர்-பாலசுப்பிரமணியம். *தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்-பிரியங்கா. *சமூக நலத்துறை இயக்குநர்-சரண்யா. *டிட்கோ செயல் அலுவலர்-ஸ்வேதா சுமன். *கூட்டுறவு, உணவுத்துறை துணை செயலாளர்-பனோத் ம்ருகேந்தர் பால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 4, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. முக்கிய தகவல்

ரேஷன் கார்ட்டில் உள்ள மொபைல் நம்பரை இணைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டும் என்றால் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பவர்களுக்குத்தான் இந்த தகவல். கிட்டத்தட்ட அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைனில் செய்ய முடியும் என்றாலும், நம்பரை ஆன்லைனில் மாற்ற முடியாது. தாலுகா அலுவலகத்துக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
News March 4, 2026
₹1,88,70,00,00,00,000 ஒரு மாதத்துக்கு செலவா?

ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் மட்டுமே அமெரிக்கா சுமார் ₹6,900 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் ஒரு மாதத்திற்கு தொடரலாம் என டிரம்ப் எதிர்பார்ப்பதால், மொத்த செலவு ₹18.87 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ‘USS Gerald R Ford’ என்ற விமானம் தாங்கிக் கப்பலின் பராமரிப்புக்கு மட்டும் ஒரு நாளைக்கு ₹58 கோடி செலவாகிறதாம்.
News March 4, 2026
ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி: விஜய்

தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக என தஞ்சை கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார். இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என அனைத்து அணிகளையும் தவெக அடித்து நொறுக்கும் என்ற அவர், தனக்கும் மக்களுக்கும் இருப்பது எலெக்ஷனால் ஏற்பட்ட பந்தம் அல்ல, இது எமோஷனால் ஏற்பட்ட பந்தம் என்றார் . மேலும், ஓம் சக்தி, பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என சின்ன பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.


