News January 19, 2025
BREAKING: தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்

பாஜக உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசிக்கு ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பர் ஆனந்த் அய்யாசாமி, கோவை மேற்கு – சந்திரசேகர், நெல்லை வடக்கு முத்து பலவேசம், சேலம்- சசி, தேனி – ராஜபாண்டியன் உட்பட நீலகிரி, அரியலூர், காஞ்சி, குமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 5, 2026
கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை திமுக தேர்வு செய்தது எப்படி?

திமுகவின் பேச்சாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ராஜ்யசபா வேட்பாளராக தேர்வானது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. எனினும் அவர் தேர்வானதற்கு கிறிஸ்துவ மீனவ சமூகத்தை சார்ந்தவர் என்பது முக்கிய காரணமாம். விஜய்யின் அரசியல் வருகை மீனவ சமூக மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படும் நிலையில், அம்மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
News March 5, 2026
நாளை சனிப் பெயர்ச்சி.. 4 ராசிக்கு எச்சரிக்கை

சனி பகவான் நாளை (மார்ச் 6) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 4 ராசியினருக்கு சிக்கல் ஏற்படுமாம். *மீனம்: தேவையற்ற அலைச்சல், மன உளைச்சல், வேலைப் பளு ஏற்படலாம். *மேஷம்: பண பரிமாற்றம் செய்யும்போது எச்சரிக்கை தேவை, நிதி இழப்பு நேரிடலாம். *கும்பம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வர வாய்ப்பு. *சிம்மம்: எடுத்த காரியத்தில் தடை, தாமதம் ஏற்படும். கோர்ட் வழக்குகளை சந்திக்கக் கூடும்.
News March 5, 2026
ஈரானின் அறிவிப்பு.. இந்தியாவுக்கு நல்ல செய்தி!

<<19275218>>ஹார்முஸிலிருந்து<<>> அனைத்து நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்த மாட்டோம் என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. இது இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளின் கப்பல்கள் தென்பட்டால் உறுதியாக தாக்கி அழிப்போம் என்றும் எச்சரித்துள்ளது.


