News March 16, 2024
BREAKING: “இரட்டை இலை” சின்னம்.. புதிய சிக்கல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி -இல் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது இபிஎஸ்-க்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.
Similar News
News January 16, 2026
விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

தை அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜன.17) ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக TNSTC தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், நாளை மறுநாள் ராமேஸ்வரம் – சென்னை இடையே சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கியதும் <
News January 16, 2026
‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ எது தெரியுமா?

சுவிட்சர்லாந்து செல்லாவிட்டால் என்ன? அதன் அழகை இந்தியாவிலேயே ரசிக்கலாம்! சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் போல காட்சியளிக்கும் அழகிய மலைப்பிரதேசம் தான் ஹிமாச்சலில் உள்ள ‘கஜ்ஜியார்’. 1992-ல் இங்கு வந்த சுவிஸ் தூதர், இதன் அழகில் மயங்கி ‘இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து’ என பெயர் சூட்டியுள்ளார். இயற்கை அழகின் சொர்க்கமாய் ஜொலிக்கும் கஜ்ஜியார், அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய அற்புத இடம்!
News January 16, 2026
BREAKING: விஜய் முக்கிய முடிவு

அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காதது சர்ச்சையாக உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் பேசிய தவெகவின் CTR நிர்மல் குமார், தேவை ஏற்படும் போது நிச்சயமாக விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார் என்றும், அவருக்கு பயம் கிடையாது எனவும் கூறியுள்ளார். ஒருவேளை விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தால் முதல் கேள்வியாக என்ன கேட்கலாம்?


