News March 21, 2024
BREAKING: வீடு வீடாக வருகிறது..

தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டுமென வீடு வீடாக சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News December 5, 2025
4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி: CM ஸ்டாலின்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ₹1,003 கோடி முதலீட்டில் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜி ஆலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், மின்னணு பொருள்களின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும், மின்னணு துறையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 9 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
News December 5, 2025
90s கிட்ஸ்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்!

சிறுவயதில் பல கார்ட்டூன்களை பார்த்திருந்தாலும் பவர் ரேஞ்சர்ஸ் தொடருக்கென இன்றளவும் நம் மனதில் தனி இடம் உள்ளது. இந்நிலையில், பவர் ரேஞ்சர்ஸின் புதிய சீசனை உருவாக்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக அதன் இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பழைய கிளாசிக் ரேஞ்சர்கள் இடம்பெறுவார்களா என்பது சந்தேகமே. இது இணைய தொடராக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
மீண்டும் செங்கோட்டையன் செய்த சம்பவம் (PHOTO)

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி செங்கோட்டையன், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். தவெகவில் இணைந்த பிறகும் அவர் MGR, ஜெயலலிதாவின் போட்டோவை பயன்படுத்துவது அரசியல் களத்தில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ஆனாலும், மீண்டும் மீண்டும் MGR, ஜெயலலிதா விவகாரத்தில் அவர் விடாபடியாக உள்ளார். இது குறித்து உங்கள் கருத்து?


