News March 18, 2025
BREAKING: திமுக வெளிநடப்பு

மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொகுதி மறுவரையறை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அவையில் விவாதிக்க அனுமதிக்காமல் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டி, மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
Similar News
News March 18, 2025
இதுதான் நாகதோஷமோ?… துரத்தி துரத்தி கடிக்கும் பாம்பு

ஆந்திராவில் விநோத நிகழ்வால் அவதிப்பட்டு வருகிறார் 50 வயதான சுப்ரமணியம். எங்கு சென்றாலும், தன்னை விரட்டி விரட்டி பாம்பு கடிப்பதாக அவர் குமுறுகிறார். 20 வயதில் தொடங்கி இப்போதுவரை பல டஜன் முறைகள் தன்னை பாம்பு கடித்ததாக கூறும் சுப்ரமணியம், வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தாலும் பாம்பு கடி தொல்லைக்கு தீர்வு கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கிறார். சம்பாதிப்பது எல்லாமே சிகிச்சைக்கே செலவாகி விடுகிறதாம்.
News March 18, 2025
ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளன: வைஷ்ணவ்

2014-15 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நிகழ்ந்த ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். லாலு, மம்தா அமைச்சர்களாக இருந்த போது ரயில் விபத்துக்களின் எண்ணிக்கையை விட தற்போது விபத்துகள் குறைந்துள்ளதாகவும், இது மேலும் கட்டுப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். ரயில் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 18, 2025
மீனவர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்

TN மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைதாகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த 3 மாதங்களில் இது 10வது சம்பவம் என கூறியுள்ளார். மேலும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்கள், படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.