News March 21, 2024
BREAKING: திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் ஆதரவு வழங்க உள்ளார். துரோக அதிமுகவை வீழ்த்த 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த அவர், பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அனைவரும் ஒரே குடையின் கீழ் அணியாக திரள வேண்டியுள்ளதாக கூறினார்.
Similar News
News October 20, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

உங்களது மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நிராகரிப்புக்கான காரணம் குறித்து போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும். அந்த காரணம் ஏற்புடையதல்ல என நீங்கள் எண்ணினால், மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் இணைந்து கொள்ளலாம். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் ₹1,000 வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 20, 2025
தேவதைகளின் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி திரையுலக நட்சத்திரங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர். கிளாஸியாகவும், மாடர்னாகவும் ஆடை அணிந்து எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்த்து யாருடைய தீபாவளி லுக் நல்லா இருக்குனு கமெண்ட் பண்ணுங்க..
News October 20, 2025
₹66 கோடி வசூலித்த ‘டியூட்’

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ உலகளவில் மூன்றே நாள்களில் ₹66 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், தீபாவளி விடுமுறை காரணமாக வசூல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதே நிலை நீடித்தால் ‘டியூட்’ ₹100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க ‘டியூட்’ பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?