News August 8, 2025
BREAKING: ஆக.13-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஆக.13-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். காலை 10:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
நீதிபதி அழைத்தும் வரமறுத்த ராமதாஸ்..!

அன்புமணி தரப்பில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ராமதாஸ் தரப்பில் HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையின் போது <<17340719>>ராமதாஸ், அன்புமணியிடம்<<>> தனியாகப் பேச வேண்டியிருப்பதால் இருவரையும் நேரில் வருமாறு நீதிபதி அழைத்தார். இதற்கு அன்புமணி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராமதாஸால் வரமுடியாது என அவரது வழக்கறிஞர் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
‘வாழும் பெரியார்’ CM ஸ்டாலின்: உதயநிதி

மதம்பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம் தான் மாநில கல்வி கொள்கை என உதயநிதி தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை, இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, நீட் என பல வழிகளில் தமிழக மக்களின் கல்வி கனவை சிதைக்கும் முயற்சிகள் நடப்பதாக சாடினார். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதியாக நின்றவர் CM ஸ்டாலின் என்றும், ‘வாழும் பெரியாராக’ அவர் திகழ்வதாகவும் கூறினார்.
News August 8, 2025
சினிமா ரவுண்டப்: தெலுங்கில் கால் பதிக்கும் யோகி பாபு

*‘கூலி’ படத்துக்கான பின்னணி இசையை முடிந்த அனிருத்
*ராகவ லாரன்ஸ் தனது தம்பியுடன் இணைந்து நடிக்கும் ‘புல்லட்’ படத்தின் டீசர் வெளியானது
*கேரளாவில் கூலி படத்தின் முன்பதிவுக்காக குவிந்த ரசிகர்கள்
*தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் யோகி பாபு
*‘Kantara Chapter1’ படத்தில் நடிக்கும் ருக்மினி வசந்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது.