News August 30, 2025
BREAKING: கூட்டணியை உறுதி செய்த தேமுதிக? PHOTO

சென்னையில் நடைபெற்று வரும் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில், NDA தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் ஜெ.,வுடன் பிரேமலதா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அதிமுக கூட்டணி தலைவர்களுடன் ஒன்றாக எல்.கே.சுதீஷ் அமர்ந்திருக்கிறார். இது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
Similar News
News August 30, 2025
சொத்துகளை சேருங்கள், கடனை அல்ல!

இளம் தலைமுறையினருக்கு பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, முக்கிய அட்வைஸ் அளித்துள்ளார். அதில் அவர், ‘வருமானத்திற்கு ஏற்ப வாழ கற்றுக் கொள்ளுங்கள். முதலீடுகள் செய்ய தொடங்குங்கள். செலவு செய்வதற்கு முன் சேமிக்க பழகுங்கள். எப்போதும் அவசரகால நிதியை கையிருப்பு வைத்திருங்கள். வருமானத்தை ஈட்டுவதற்கான திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். சொத்துகளை சேருங்கள்.. கடனை அல்ல’ என்கிறார். உங்க அட்வைஸ் என்ன? SHARE IT.
News August 30, 2025
17 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நண்பர்களே, உங்க பகுதியில் இப்போ மழை பெய்யுதா?
News August 30, 2025
டிரெண்டிங்: TRUMP IS DEAD

டிரம்ப் இறந்துவிட்டதாக X-ல் டிரெண்டாகி வருகிறது. இதுவரை 1.60 லட்சம் பேர் ‘#TRUMP IS DEAD’ என பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் டிரம்ப்பின் உடல்நிலை மோசமாகி விட்டதாக தகவல் பரவியது. அசம்பாவிதம் நிகழ்ந்தால் தலைமையேற்க தயாராக இருப்பதாக USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இப்படி டிரெண்டாகி வருகிறது. ஆனால், டிரம்ப் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியிருந்தது.