News September 24, 2025

BREAKING: தீபாவளி போனஸ்.. வந்தது ஹேப்பி நியூஸ்

image

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்பட்டது. அதேபோல், இந்தாண்டு தீபாவளிக்கும் போனஸ் வழங்குவது குறித்து, மோடி தலைமையில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News September 24, 2025

திமுகவுக்கு விசுவாசம் காட்டும் செல்வப்பெருந்தகை: EPS

image

செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு விசுவாசமாக இல்லாமல் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார் என EPS விமர்சித்துள்ளார். யாசகம் கேட்போர் எப்படி ஒட்டு போட்ட சட்டை அணிந்திருப்பார்களோ, அதுபோல செல்வபெருந்தகை பல கட்சிகளில் இருந்துவிட்டு காங்கிரஸுக்கு வந்திருப்பதாக EPS சாடியுள்ளார். அவர் காங்கிரஸ்காரர் போல் செயல்படாமல் திமுகவை தாங்கிப்பிடிக்கும் வேலையை மட்டுமே செய்வதாகவும் EPS பேசியுள்ளார்.

News September 24, 2025

இந்தியாவின் தூய்மையான கிராமத்துக்கு செல்ல தயாரா?

image

ஆசியாவின் மிகவும் தூய்மையான கிராமம் என்று அழைக்கப்படும் மவ்லின்னாங், மேகாலயாவின் கிழக்கு காசி மலையில் அமைந்துள்ளது. இங்கு மூங்கில் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துகின்றனர். தலைமுறை தலைமுறையாக பிளாஸ்டிக்கை தவிர்த்து வருகின்றனர். மேலும், இதன் ரம்மியமான இயற்கை அழகு மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றுக்காக உலகளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த கிராமத்தை நிச்சயம் ஒருமுறை விசிட் செய்யனும். நீங்க எப்படி?

News September 24, 2025

BREAKING: தீபாவளி போனஸ் அறிவித்தது அரசு

image

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க PM மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் இதனால் பயன்பெறுவர். தீபாவளி போனஸ் வழங்க ₹1,865 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!