News March 20, 2024

BREAKING: கூட்டணியை அறிவித்தது தேமுதிக

image

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. அதேபோல், தேமுதிக கட்டாயம் கேட்ட மாநிலங்களவை சீட் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Similar News

News February 10, 2026

என்ன HairCut பண்ணனும் தெரியலயா? APP கிட்ட கேளுங்க

image

உங்கள் முகத்துக்கு எந்த மாதிரியான Hairstyle எடுப்பாக இருக்கும் என தெரியவில்லையா? அந்த பிரச்னையை சரி செய்ய ஒரு செயலி இருக்கிறது. Playstore-ல் உள்ள ‘HiFace’ (அ) Hairstyle Try On ஆகிய செயலிகளின் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்து, அதில் செல்ஃபியை அப்லோடு செய்தால் போதும். முகத்திற்கு ஏற்ற Beard Style, Hairstyle, Sunglasses-ஐ அதுவே பரிந்துரைக்கும். இது சொல்வதை போல நீங்கள் Try செய்து பாருங்கள். SHARE.

News February 10, 2026

EXCLUSIVE: அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு

image

தமிழக பாஜக சக்தி கேந்திராவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்.14-ம் தேதி அமித்ஷா சேலம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாம். சக்தி கேந்திரா என்பது தேர்தல், கட்சிப் பணிகளை வலுப்படுத்தும் பிரிவு ஆகும். வாக்குச்சாவடிகள், பிரசாரம் உள்ளிட்ட பணிகள் இதன் கீழ்தான் வருகின்றன. சுமார் 25,000 பேர் இந்த பிரிவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

News February 10, 2026

சிக்கன் சாப்பிடுவோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை

image

TN-ல் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சிக்கன் சாப்பிடுவோர் நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் எனவும், ஆப் பாயில் சாப்பிட வேண்டாம் என்றும் கூறினார். மேலும், மர்மமான முறையில் உயிரிழந்த கோழிகளை சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!