News April 11, 2025
BREAKING: டெல்லி அணி 4ஆவது வெற்றி

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை குவித்தது. இதையடுத்து 164 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி விளையாடியது. அதிரடியாக விளையாடிய அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது. கே.எல். ராகுல் 93 ரன்களை விளாசினார்.
Similar News
News December 2, 2025
CINEMA 360°: ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதி மாற்றம்

*மோகன் லாலின் ‘திரிஷ்யம் – 3’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. *கார்த்தியின் வா வாத்தியார் படம் வருகிற 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், அது டிச.12 தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. *விமல் நடித்துள்ள ‘மகாசேனா’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. *‘அங்கம்மாள்’ படத்தில் இருந்து ‘செண்டிப்பூவா’ பாடல் வெளியாகி உள்ளது.
News December 2, 2025
தொகுதிப் பங்கீட்டில் இறங்கிய புதுச்சேரி ஆளும் கூட்டணி

புதுச்சேரியில் பாஜக, NR காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இருகட்சிகளும் ஈடுபட்டுள்ளன. CM ரங்கசாமியின் இல்லத்தில் பாஜகவின் புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. கடந்த தேர்தலில் NR காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் BJP, ADMK ஆகிய கட்சிகள் போட்டியிட்டது.
News December 2, 2025
புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் குறைந்திருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் இருந்து 3 கி.மீ., ஆக குறைந்துள்ளது. சென்னைக்கு அருகிலேயே தாழ்வு மண்டலம் நிலை கொண்டதால் 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 12 மணிநேரத்தில், இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மழை குறைய தொடங்கும்.


