News April 25, 2025
BREAKING: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து!

இபிஎஸ்-க்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக, கே.சி.பழனிசாமி இபிஎஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.
Similar News
News November 26, 2025
மாநிலங்களின் உரிமையை காக்க அனைத்தும் செய்வோம்: CM

இந்தியா, ஒரு சித்தாந்தத்திற்கோ கலாசாரத்திற்கோ சொந்தமானதல்ல, அது அனைவருக்கும் சொந்தம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அம்பேத்கரின் பார்வையை சுருக்க முயற்சிக்கும் சக்தியை எதிர்ப்போம் என்ற அவர், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியலமைப்பின்படி கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், மாநில உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்தையும் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News November 26, 2025
புயல் உருவானது.. கரையை கடக்கும் இடம் இதுதான்

மலாக்கா நீரிணையில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக IMD தெரிவித்துள்ளது. UAE பரிந்துரையின்படி ‘சென்யார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயலானது சுமத்ரா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 2,600 கிமீ தொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் IMD கூறியுள்ளது.
News November 26, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹11,800-க்கும், சவரன் ₹640 உயர்ந்து ₹94,400-க்கும் விற்பனையாகிறது. <<18390417>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில், நேற்று சவரனுக்கு ₹1,600, இன்று ₹640 என 2 நாள்களில் மட்டும் ₹2,240 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. SHARE IT.


