News September 27, 2025

BREAKING: கரூரில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைக்கிறது.
ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து ஹாஸ்பிடலை நோக்கி வந்து கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.

Similar News

News September 28, 2025

கரூர் துயரம் நெஞ்சை பதைக்கிறது: கமல்ஹாசன்

image

கரூர் துயரச் சம்பவம் நெஞ்சை பதைக்கிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க வார்த்தைகளின்றித் திகைக்கிறேன் என்றும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News September 28, 2025

கரூர் துயரம்: துணை ஜனாதிபதி இரங்கல்

image

கரூர் துயரம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கல்களை கூறிய அவர், கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 28, 2025

BREAKING: கரூர் விரைந்தார் CM ஸ்டாலின்

image

தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு CM ஸ்டாலின் கரூர் விரைந்துள்ளார். தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்ல உள்ளார். முன்னதாக அமைச்சர்கள் அன்பில் மகேஸ், ரகுபதி, Ex அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

error: Content is protected !!