News October 29, 2025
BREAKING: கரையை கடந்தது மொன்தா புயல்

வங்கக்கடலில் உருவான மொன்தா புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே நள்ளிரவு 12:30 மணியளவில் கரையை கடந்ததாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 1-2 மணி நேரத்தில் முழுமையாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இதனிடையே, ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News October 29, 2025
அக்டோபர் 29: வரலாற்றில் இன்று

*உலக பக்கவாத நாள்.
*1832 – பெங்களூரில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
*1886 – பிரிட்டிஷ் இந்திய அரசு – திருவாங்கூர் மன்னர் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
*1931 – கவிஞர் வாலி பிறந்தநாள்.
*1950 – கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கல்கி இதழில் முதல்முறையாக வெளிவர ஆரம்பித்தது.
News October 29, 2025
காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு

டிரம்ப் மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம், தற்போது மீறப்பட்டுள்ளது. இஸ்ரேல் PM நெதன்யாகு, காஸாவில் உடனடியாக கடும் தாக்குதலை நடத்துமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது மீண்டும் அப்பாவி காஸா மக்கள் மீதான கொடூரத்திற்கு வித்திடும் என உலக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
News October 29, 2025
SK பட இயக்குநருடன் இணையும் சூரி

நடிகர் சூரி அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில், ‘நேற்று இன்று நாளை’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. சூரி தற்போது ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘செல்ஃபி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.


