News April 11, 2025
BREAKING: சிஎஸ்கே அணி பேட்டிங்

சென்னையில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. சென்னை அணிக்கு தோனி தலைமை வகிக்கிறார். போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா? இல்லை கொல்கத்தா அணி வெற்றி பெறுமா? கீழே கமெண்ட் பாக்சில் பதிவிடுங்க.
Similar News
News April 18, 2025
கதாநாயகனாக களமிறங்கும் விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவியில் கலக்கி வரும் பாலா தற்போது தமிழ் திரையுலகில் கலக்கப்போகிறார். தொகுப்பாளராக செயல்பட்டு வரும் பாலா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இப்போது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரீஃப்பின் புதிய படத்தில் அவர் நாயகனாக களமிறங்குகிறார். படத்தின் போஸ்டரை ராகவா லாரன்ஸ் X -தளத்தில் வெளியிட்டுள்ளார்.
News April 18, 2025
BED-ல் இதை செய்யாதீங்க

நம்மில் பலரும் BED-ல் ஈர டவலைப் போட்டுவிட்டு கண்டுக்காமல் சென்று விடுகிறோம். ஆனால் இதனால் கிருமி உண்டாகி, BED-லிலும், படுக்கை விரிப்பிலும் வேகமாக பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லை, நமது உடலிற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர். வெளியில் இருந்து வந்து கால்களை சுத்தம் செய்யாமல் படுக்கைக்கு செல்வதும் உடல்நலனை பாதிக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
News April 18, 2025
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் OPS

தமிழக முன்னாள் முதல்வர் OPS, கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அங்கே வந்த அவர், இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இன்று அவர் தேனி புறப்பட்டுச் சென்றார்.