News April 10, 2025
BREAKING: சிஎஸ்கே கேப்டன் தோனி

சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருத்ராஜ் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார்.
Similar News
News December 2, 2025
நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.122-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.112-ஆக குறைந்து உள்ளது. முட்டை விலை உயர்வை தொடர்ந்து, முட்டை கோழி விலையும் உயர்வடைந்து வந்த நிலையில், தற்போது விலை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 2, 2025
கொட்டும் கனமழை.. விமான சேவை ரத்து

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதனையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஏர்போர்ட்டில் இருந்து அகமதாபாத், அந்தமான், மும்பை செல்லக்கூடிய பல விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
News December 2, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.2) சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹30 குறைந்து ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனையாகிறது. இந்திய சந்தையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவால் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹196-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,96,000-க்கும் விற்பனையாகிறது.


