News August 28, 2025
BREAKING: தொடர் விடுமுறை.. மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது. கச்சிகுடா – மதுரை (அக்.20 முதல் நவ.26 வரை திங்கள் மட்டும்), மதுரை – கச்சிகுடா (செப். 22 – நவ. 26 வரை புதன் மட்டும்), ஹைதராபாத் – கன்னியாகுமரி (அக்.15 – நவ. 26 வரை புதன் மட்டும்), கன்னியாகுமரி – ஹைதராபாத் (அக்.17 முதல் நவ. 28 வரை வெள்ளி மட்டும்) ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 29, 2025
இன்று தேர்தல் நடந்தாலும் வெல்வது இவர்கள் தான்!

இன்று தேர்தல் நடந்தாலும் NDA கூட்டணி 324 தொகுதிகளில் (பாஜக – 260 தொகுதிகள்) வெல்லும் என இந்தியா டுடே – சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், INDIA கூட்டணி 208 தொகுதிகளிலும், காங்., 97 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நாடு முழுவதும் 54,788 பேரிடம் நேரடி சர்வே, 1.25 லட்சம் பேரிடம் நேர்காணல், 2.06 லட்சம் பேரிடம் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 29, 2025
பிரதீப் ரங்கநாதனின் சட்டை ஸ்டோரி தெரியுமா ?

விஜய்யை போல நடிகர் PR மேடைகளில் குட்டி கதை சொல்பவர். தற்போது அவர் பேசிய சட்டை ஸ்டோரி செம வைரல். சாதா சட்டை போட்ட பையன் உழைச்சு காஸ்ட்லி சட்டை போட்டா, பழச மறந்துட்டனு சொல்லுவாங்க. சரின்னு பழைய சட்டை போட்டா, நடிக்கிறனு சொல்லுவாங்க. சட்டைய கிழிச்சுட்டா, பைத்தியம்னு சொல்லுவாங்க. பிறருக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தால் பைத்தியம் ஆகிடுவோம். எனவே வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும் என்று அவர் கூறினார்.