News April 21, 2025
BREAKING: காங். MLA-வுக்கு 3 மாதம் சிறை

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும், கிள்ளியூர் காங். MLAவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்கச் சென்ற அரசு அதிகாரிகளை தாக்கியதாக அவர் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தற்போது மூவருக்கும் சிறை தண்டனையுடன் ₹100 அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News November 10, 2025
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: ED மனுவை ஏற்க SC மறுப்பு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான ED நடவடிக்கைக்கு தடை விதித்திருந்த ஐகோர்ட், அவரின் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், தடையை மீறி ED மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ED மனுத்தாக்கல் செய்த நிலையில், அதை ஏற்க SC மறுத்துள்ளது.
News November 10, 2025
இந்தியாவின் ‘பழம்பெரும்’ Brand-கள் பற்றி தெரியுமா?

பிஸ்கட், சோப்பு, கார் என பல தலைமுறையாக இந்தியாவில் இருக்கும் சில உள்நாட்டு Brand-கள் வெறும் பெயர்கள் அல்ல. அவை பாரம்பரியம், பெருமை. உள்ளூர் வேர்கள் உலகளாவில் தடம் பதிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். அப்படி நமது அன்றாட வாழ்க்கையை வடிவமைத்த, சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட சில Brand-கள் பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க.
News November 10, 2025
பலதார மணத்துக்கு தடை: அசாம் அமைச்சரவை ஒப்புதல்

அசாமில் பலதார மணத்தை தடை செய்யும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் வரும் நவ.25-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும். பழங்குடியினருக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


