News February 1, 2025
BREAKING: வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு

19 கிலோ வர்த்தக உபயோக சிலிண்டர் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று அதன் விலை ரூ.1966ஆக இருந்தது. இந்நிலையில் மாத தொடக்கத்தில் விலை மாற்றப்படுவதை போல இன்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று ரூ.1959.50க்கு விற்கப்படுகிறது. இதையும் சேர்த்து கடந்த 31 நாள்களில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.21 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜன.1ஆம் தேதியும் அதன் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டது.
Similar News
News March 2, 2026
ராம்நாடு: இளம்பெண் தற்கொலையில் பகீர் திருப்பம்.!

உச்சிப்புளியை சேர்ந்தவர் சசிகலா (27). இவர் பாண்டி என்பவரை காதலித்த நிலையில், முருகன் என்பவருடன் திருமணமானது. காதல் கைகூடாததால் ஜன.17 ம் தேதி தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இது குறித்து காவல்துறை நடத்திய ரகசிய விசாரணையில், வெளிநாட்டில் இருந்து வந்த சசிகலாவின் சகோதரர் அஜித், பாண்டியுடனான காதலை கைவிட கூறி தகராறு செய்ததும், இதில் அஜித் சசிகலாவை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
News March 2, 2026
டெய்லி டிபனாக தோசை சாப்பிடலாமா..?

இந்த கேள்வி உங்களுக்கு எழுந்தால், நல்லதுதான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், தோசையுடன் தானியங்கள், கறிவேப்பிலை, வெந்தயம், கீரை ஆகியவற்றை சேர்க்கவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், சட்னியில் புரோட்டின் நிறைந்த பாதாம், பிஸ்தாவையும் சேர்க்கலாம் என்கின்றனர். இது எடை அதிகரிக்க விரும்புவோருக்கு சிறந்த வழி எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள். நாளை உலக தோசை தினம். உங்களுக்கு பிடித்த தோசை வகை எது?
News March 2, 2026
கூட்டணி பேச்சுவார்த்தையில் முரண்.. EPS முக்கிய முடிவு

மதுரையில் பாஜகவுடன் <<19276123>>நேற்று நடத்திய<<>> தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் கசிந்துள்ளது. பேச்சின் முடிவை EPS ஏற்கவில்லை என கூறப்படும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவர் டெல்லிக்கு திடீர் விசிட் அடிக்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக, நேற்று பொதுக்கூட்ட மேடையிலேயே, அதிமுக ஆட்சி என்று EPS-ம், NDA ஆட்சி என்று PM மோடியும் முரணாக பேசியிருந்தனர்.


