News March 30, 2024
BREAKING: பாஜக – பாமகவினர் இடையே மோதல்

கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தின் போது பாஜக – பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முத்துநகரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவரது வாகனத்தின் முன் யார் நிற்பது என இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதனால், அங்கு சிறிதுநேரம் பதற்றமான சூழல் நிலவியது.
Similar News
News December 31, 2025
திண்டுக்கல்: Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம். 1) SBI – 90226 90226 2) Canara Bank – 90760 30001 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234 5) HDFC – 70700 22222. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க அதிகம் SHARE செய்யுங்க!
News December 31, 2025
கஞ்சா இல்லை என்பது வடிகட்டிய பொய்: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை என்று <<18711448>>அமைச்சர் மா.சு.,<<>> கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாடே தலைகுனியும் வகையில் <<18693605>>திருத்தணி <<>>சம்பவம் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்த இந்த மோசமான ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
ஹாலிவுட் நடிகர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் இசியா விட்லாக் ஜூனியர் (71) உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் புகழ்பெற்ற ‘The Wire’ மற்றும் ‘Veep’ சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும், The Good Cop, The Last Husband ஆகிய படங்களில் நடித்தது மட்டுமின்றி, சில படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


