News March 26, 2024

BREAKING: சென்னை அணி அபார வெற்றி

image

GT அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற GT அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த CSK அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய GT அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

Similar News

News February 17, 2026

இந்த வீழ்ச்சி அங்கிருந்துதான் தொடங்கியதா?

image

2023 ODI WC-ஐ வென்ற பிறகு, மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்தார். அதன்பிறகு, ஆஸி., அணி கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2024 T20 WC, 2025 CT, WTC, 27 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டெஸ்ட், பாக்., இலங்கை & தெ.ஆ., அணிகளுடனான ODI தொடர் என அனைத்திலும் தோல்விகளை சந்தித்தது. தற்போது T20 WC-ல் ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்துள்ளது.

News February 17, 2026

தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

image

தங்கம் விலை இன்று 1 கிராம் ₹120 குறைந்து ₹14,320-க்கும், சவரனுக்கு ₹960 சரிந்து ₹1,14,560-க்கும் விற்பனையானது. தற்போதைய நிலவரப்படி, சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. 1 அவுன்ஸ் $106.42 (இந்திய மதிப்பில் ₹9,649) குறைந்து $4,889.71 விற்பனையாகிறது. இதனால் நாளை தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. So, ரெடியா இருங்க மக்களே!

News February 17, 2026

தொகுதிப் பங்கீடு: ஸ்டாலின் தீவிர ஆலோசனை

image

சென்னையில் தேர்தல் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பது குறித்து மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில், காங்., விசிக, IUML, கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் மற்றும் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

error: Content is protected !!