News October 8, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் மாற்றம்

ஊர், தெரு, சாலைகளின் பெயர்களுக்கு பின்னால் உள்ள <<17949340>>சாதிப் பெயர்களை நீக்க<<>> TN அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆதார், ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெயர் மாற்றத்தை உள்ளாட்சி, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்த பிறகு, TNeGA, ELCOT மூலம் ஆதார், ரேஷன் கார்டுகளில் முகவரி திருத்தங்கள் செய்ய மக்களுக்கான முகாம்கள் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. SHARE IT.
Similar News
News October 8, 2025
பொய் சொல்வதில் ஸ்டாலின் முதலிடம்: EPS

கரூர் துயரத்தை மேற்கோள்காட்டி, நெடுஞ்சாலைகளில் பரப்புரை மேற்கொள்ள அதிமுக, பாமகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை திருச்செங்கோடு பரப்புரையில் சுட்டிக்காட்டிய EPS, 2 முறை மறுக்கப்பட்ட பிறகு தற்போது பேச வந்துள்ளேன் என்றார். பொய் கூறுவதில்தான் ஸ்டாலின் முதலிடம் என விமர்சித்த EPS, அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், தன்னை சூப்பர் CM என ஸ்டாலின் கூறிக்கொள்வதாக சாடினார்.
News October 8, 2025
வின்டர் சீசனில் டூர் போக சிறந்த இடங்கள்!

குளிர் காலங்களில் பனி போர்த்திய மலைப்பகுதிகள், வொண்டர்லேண்ட் போல் காட்சியளிக்கும். இந்தியாவில், வியப்பூட்டும் பனியின் வொண்டர்லேண்ட் அனுபவத்தை எந்த பகுதிகள் தருகின்றன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. குளிர்கால சுற்றுலாவில், உங்களுக்கு எந்த ஊருக்கு செல்ல விருப்பம்? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 8, 2025
5 பெண்களை திருமணம் செய்த தமிழ் நடிகர்

ஆரம்பத்தில் நாடக கம்பெனியில் உடன் நடித்த பிரேமாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்த MR ராதாவுக்கு ஒரு மகன் பிறந்தார். பின்னர், மனைவி, மகன் இருவரும் அம்மை நோயால் இறந்தனர். இதனையடுத்து, சரஸ்வதி, தனலட்சுமி என்ற சகோதரிகள் மற்றும் ஜெயம்மாள் ஆகியோரை வெவ்வேறு ஊர்களுக்கு சென்றபோது திருமணம் செய்துகொண்ட நடிகைகளுக்கு மொத்தம் 12 குழந்தைகள். கடைசியாக திருமணம் செய்த கீதா ராதாவின் குழந்தைகளே ராதிகா, நிரோஷா.