News October 17, 2025
BREAKING: அதிரடியாக கைது செய்தது சிபிஐ

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநர் ரவிச்சந்திரனை CBI அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 6-வது நபராக ரவிச்சந்திரனை கைது செய்த CBI அதிகாரிகள் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர், முன்னதாக கைது செய்யப்பட்ட போலீசாருக்கு எதிராக சாட்சியங்கள் அளித்திருந்தார்.
Similar News
News October 17, 2025
கல்லீரலை பாதுகாக்கும் சூப்பர் காய்கறிகள் இதோ!

அன்றாடம் நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் நமது கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமான முறையில் பாதிக்கிறது. ஆனால் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு சில காய்கறிகள் உதவும். முக்கியமாக பீட்ரூட்டில் உள்ள ஆன்ட்டி-ஆக்சிடென்ட்கள் கல்லீரலில் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதேபோல ப்ராக்கோலி மற்றும் காலிஃபிளவரில் வேக வைத்து சூப்பாக பருகுவது கல்லீரலுக்கு நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
News October 17, 2025
10.1% சரிந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி

டிரம்ப்பின் வரி விதிப்பால் திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிந்துள்ளது. கடந்த செப். மாதம் ₹8,043 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தாலும், இது கடந்த ஆண்டு செப். மாதத்தை விட ₹1,393 கோடி குறைவாகும். அதாவது, அமெரிக்க டாலர் மதிப்பில் 10.1% சரிவை சந்தித்துள்ளது. எனினும், சர்வதேச சந்தை தேவை காரணமாக வரும் மாதங்களில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News October 17, 2025
விஜய்யை அடுத்த MGRனு சொல்லலாமா? அமீர்

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் சொல்ல முடியாது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். அதேநேரம் MGR என்ற கூர்மையான வாளை, அண்ணா என்ற போர் வீரர் சரியாக பயன்படுத்தியதாகவும், ஆனால் விஜய் என்ற வாளை சரியாக பயன்படுத்த யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார். விஜய் என்ற வாளை பயன்படுத்தப்போவது நல்லவர்களா? தீயவர்களா? என்பது 2026 தேர்தலில்தான் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.