News October 9, 2025
BREAKING: விஜய் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அதிகாலை முதலே போலீசார், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, கடந்த 28-ம் தேதியும் விஜய் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 9, 2025
சற்றுமுன்: நாகேந்திரன் மரணம்.. பெரும் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தாதா நாகேந்திரன், ஸ்டான்லி ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். 2005-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து பல்வேறு ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News October 9, 2025
சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள்!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. சென்செக்ஸ் 82 புள்ளிகள் சரிந்து 81,691 புள்ளிகளிலும், நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 25,040 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, NTPC, HDFC Life, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவனங்களின் ஷேர்கள் சரிந்துள்ளன. அதேநேரம் TCS, Tata Steel, Reliance நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டுள்ளன.
News October 9, 2025
இருமல் சிரப்பை தொடர்ந்து இந்த மருந்தும் ஆபத்து!

நரம்பு வலி, கீழ் முதுகு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான Tramadol, இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 6,506 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த மருந்து குறைந்த செயல்திறனை கொண்டிருப்பதோடு, இதய நோய் பிரச்னைகளை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருமல் டானிக் விவகாரம் குழந்தைகளை பாதித்த நிலையில், இந்த Tramadol பெரியவர்களை குறிவைக்கிறது.