News March 19, 2024
BREAKING: பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது

அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது. சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் 10 மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
Similar News
News November 26, 2025
குமரி: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன். இவரது மகன் அபிஷாந்த் (27), உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இவர், வீட்டின் அருகில் உள்ள தோப்பில் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.
News November 26, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. அதன்படி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்


