News March 30, 2024
BREAKING: உடைகிறது பாஜக கூட்டணி

பாஜக கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட பாஜக ஒதுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில், அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் I.N.D.I.A. கூட்டணியில் இணைவார் அல்லது தனியாக போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
Similar News
News January 17, 2026
கிருஷ்ணகிரி: பதற்றத்தால் பறிபோன உயிர்!

மத்தூரை அடுத்த மூக்கா கவுண்டனூரை சேர்ந்தவர் பிரபாகரன் (21). இவர் நேற்று முன்தினம் பைக்கில் கொடமாண்டபட்டி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் பைக்கில் சென்ற நபர் எந்தவித சிக்னலும் போடாமல் திரும்பியதால், பதற்றத்தில் பிரபாகரன் முன்னே சென்ற வேறு வாகனம் மீது மோதினார். இதில் பிரபாகரன் உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News January 17, 2026
நாட்டின் முக்கிய தொழிலதிபர் காலமானார்

நாட்டின் எஃகு உற்பத்தித் துறையின் ஜாம்பவானும், முக்கிய தொழிலதிபருமான மோகன் லால் மிட்டல்(99) காலமானார். ராஜஸ்தானின் ராஜ்கர் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் உயர்ந்தவர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கிய உன்னத மனிதரை இழந்துவிட்டோம் என மோகன் லால் மறைவுக்கு PM மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #RIP
News January 17, 2026
காலை வெறும் வயிற்றில் இத குடிங்க..

காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன், செரிமான மேம்பாடு, முடி வளர்ச்சி, உடல் எடையை குறைக்க, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவுகிறது. இதிலிருக்கும் சத்துக்களை குறைக்கலாம் என்பதால் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டாம். SHARE.


