News October 25, 2025
BREAKING: தங்கம் விலை ₹800 உயர்வு

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது. இன்று(அக்.25) சவரனுக்கு ₹800 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று மாலை நேர வர்த்தகத்தில் ₹1,120 குறைந்திருந்த நிலையில், மிகப்பெரிய மாற்றமாக மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹170-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News October 25, 2025
அனைத்து கட்சி கூட்டம் நடத்துக: திருமாவளவன்

விரைவில் தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். SIR தொடர்பாக SC-ல் விசாரணையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, தமிழகத்தில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் திருமா வலியுறுத்தியுள்ளார்.
News October 25, 2025
அசாம் என்கவுண்டர்: மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

இந்தியா முழுவதும் நக்சலைட்கள், மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்து, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அசாமில் உள்ள கோக்ராஜார் பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற கோக்ராஜார் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பில், தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
News October 25, 2025
அதானியை காப்பாற்ற LIC ₹33,000 கோடி முதலீடா?

கடன் மற்றும் அமெரிக்க வழக்கால் தத்தளித்த அதானி குழுமத்தை மீட்க, LIC மூலம் மத்திய அரசு ₹33,000 கோடி வழங்க திட்டமிட்டதாக The Washington Post செய்தி வெளியிட்டது. இதை மறுத்துள்ள LIC, தங்களது முதலீட்டு முடிவுகள் அனைத்தும் வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகு சுதந்திரமாக எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், இதில் நிதி அமைச்சகம் உள்ளிட்ட எந்த அரசு துறைகளின் தலையீடும் இல்லை என்றும் மறுத்துள்ளது.


