News October 21, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,080 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.21) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,080 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹260 உயர்ந்து ₹12,180-க்கும், சவரன் ₹97,440-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களில் சவரனுக்கு ₹2,240 குறைந்திருந்த நிலையில், <<18060775>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் மீண்டும் எதிரொலித்துள்ளது.

Similar News

News March 13, 2026

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

image

ஹார்​முஸ் நீரிணையில் நிலவும் ஈரானின் தாக்குதலால், பல எண்ணெய் கப்​பல்​கள் இந்​தியா வரு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்​சங்​கர் மற்றும் <<19367934>>PM மோடி ஈரான் அரசுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை<<>> நடத்தினர். அதன் பலனாக இந்​தி​ய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

News March 13, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 631 ▶குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ▶பொருள்: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

News March 13, 2026

அந்த கொடூரர்களுக்கு மரண தண்டனை வேண்டும்: சீமான்

image

பள்ளி சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தினமும் அரங்கேறுகிறது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் TN-ல் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யும் இத்தகைய கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!