News August 26, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

நேற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹74,840-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹9,355-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களுக்கு மேலாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ₹1 குறைந்து ₹130-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,30,000-க்கும் விற்கப்படுகிறது.
Similar News
News August 26, 2025
ரூட் 2012-ம் ஆண்டே என்னை கவர்ந்துவிட்டார்: சச்சின்

டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களில் சச்சின் (15921) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரூட் (13543) உள்ளார். இந்நிலையில் ரூட் திறமை குறித்து ரெடிட் தளத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2012-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அவர் விளையாடிய விதமும், விக்கெட்டை மதிப்பிடும் முறையும் தன்னை கவர்ந்ததாகவும், இங்கி., கேப்டனாக இவர் வருவார் என சகவீரர்களிடம் தான் தெரிவித்ததாகவும் கூறினார்.
News August 26, 2025
சிரஞ்சீவி அரசியலில் வீழ்ந்த கதை!

சிரஞ்சீவி நிலைதான் <<17519703>>விஜய்க்கும் <<>>என எதிர்க்கட்சியினர் ஆருடம் சொல்கின்றனர். சிரஞ்சீவிக்கு என்ன ஆனது? *1992 முதல் திட்டமிட்டு 2008-ல் சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை தொடங்கினார் * 2009 தேர்தலில் சிரஞ்சீவி (திருப்பதி) உள்பட 18 பேர் மட்டுமே வென்றனர் * YSR மறைவுக்கு பிறகு 2011-ல் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து மத்திய இணையமைச்சர் ஆனார் * 2014 ஆந்திர பிரிவினைக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி.. இந்த நேரத்தில் வழிபாடு செய்யுங்க

இன்று மாலை 4.50 – 5.50 வரை அல்லது மாலை 6.30 – இரவு 8.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், நாளை காலை 6.00 – 7.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம். நாளை விநாயகர் சிலை வாங்கினால், மதியம் 1.35 – 2.00 மணி வரை அல்லது மாலை 6.10 மணிக்கு மேல், சுண்டல், கொழுக்கட்டை, சாதம், பாயசம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபாடு செய்யலாம்.