News October 23, 2025
BREAKING: ஆஸி., வெற்றி… தொடரை இழந்தது இந்தியா

ஆஸி.,யுடனான 2-வது ODI ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 264/9 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய ஆஸி., வீரர்கள் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாட் ஷாட்(74), கூப்பர் கன்னோலி (61) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 46.2 ஓவரில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றிபெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
Similar News
News October 23, 2025
இன்னும் 5 வருடத்தில் இவை அனைத்தும் அழிந்துவிடும்!

சில விஷயங்கள் நம் வாழ்வை எளிதாக மாற்றி, இந்நாள் வரை பயனளித்து வருகின்றன. ஆனால், டெக்னாலஜி வளர்ச்சியடைய இவை, கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இவை முற்றிலுமாக அழிந்து விடும் என்றே கூறப்படுகிறது. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். வேறு என்ன டெக்னாலஜிலாம் காலப்போக்கில் மறைந்து விடும் என நினைக்கிறீங்க?
News October 23, 2025
உடனே அனைத்து பள்ளிகளிலும்

கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் தொடக்க பள்ளியின் கட்டடம் விரிசல்களுடன் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் ஒரு வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. விரிசல்களுடன் இருக்கும் பள்ளி கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும், நோய் தொற்று பரவாமல் இருக்க, பள்ளிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
News October 23, 2025
வங்கிக் கணக்கு இருக்கிறதா… முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை (வாரிசுதாரர்கள்) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் நவ.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். *அந்த 4 பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம் *டெபாசிட்ஸ், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.