News October 9, 2025
BREAKING: நள்ளிரவில் துப்பாக்கி முனையில் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை நள்ளிரவில் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 5 விசைப் படகுகள், மீன்கள், பல லட்சம் மதிப்பிலான வலைகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் இறங்க தயாராகி வருகின்றனர்.
Similar News
News October 9, 2025
தனுஷ் மாதிரியே நடிக்கிறேனா? பிரதீப் ரங்கநாதன்

தனுஷ் மாதிரியே நடிப்பதாக பிரதீப் ரங்கநாதன் மீது ஒரு விமர்சனம் உள்ளது. ஆனால் இந்த கருத்தை சமீபத்திய பேட்டியில் பிரதீப் மறுத்துள்ளார். இருவருக்கும் ஒரேமாதிரியான உடல் அமைப்பு உள்ளதால் அதுபோன்று தோன்றலாம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ் சாயலில் நடிப்பதாக தனக்கு தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கோமாளியில் இயக்குநராகவும் லவ்டுடே, டிராகன் படங்களில் நடிகராகவும் பிரதீப் அசத்தியிருப்பார்.
News October 9, 2025
மகனை அடித்து துன்புறுத்தும் போலீஸ்: வேலூர் இப்ராஹிம்

தன் மகன் மீது பொய் வழக்கு போட்டு, போலீசார் அடித்து சித்ரவதை செய்வதாக பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை அடக்குவதற்கு தனது குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி தனது மகனை வற்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகன் கஞ்சா வைத்திருந்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் தண்டனையை அனுபவிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
News October 9, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.9) சவரனுக்கு ₹120 அதிகரித்துள்ளது. இதனால் வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், சவரன் ₹91,200-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை பொறுத்தவரையில் கடந்த 9 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,320 அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தங்க நகை வியாபாரிகளிடம் கேட்டபோது வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறியுள்ளனர்.