News September 13, 2024
BREAKING: மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை

நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் தனிப்பட்ட முறையில் உரையாடிய வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக தாம் மன்னிப்பு கேட்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது எடுத்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜகவினர் செயலுக்காக சீனிவாசனிடம் வருத்தம் கேட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
Similar News
News November 25, 2025
இந்திய பயணத்தை மீண்டும் ரத்து செய்த இஸ்ரேல் PM

இஸ்ரேல் PM நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, PM மோடியை சந்திக்க நெதன்யாகு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகான பாதுகாப்பு சூழலை காரணம் காட்டி பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டில் 3-வது முறையாக அவரின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
MLA பதவியை ராஜினாமா செய்கிறாரா செங்கோட்டையன்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் TVK-ல் இணையவுள்ளதாகவும், அதற்கு முன்பாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். <<18379245>>EPS-க்கு கெடு <<>>விதித்துள்ள ஓபிஎஸ்ஸும் TVK-ல் இணைவது குறித்து டிச.15-க்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
News November 25, 2025
உலகை அச்சுறுத்தும் டாப் 10 எரிமலைகள்!

எரிமலையின் சீற்றத்தை இந்தியா பெரிதாக கண்டதில்லை. ஆனால், உலகளவில் பல எரிமலைகள் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகின்றன. அப்படி உலகை அதிரவைத்து கொண்டிருக்கும் டாப் 10 பயங்கரமான, மிகவும் ஆக்டிவான எரிமலைகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கம் Swipe செய்து அவற்றை பாருங்க. உங்களை மிகவும் பயமுறுத்திய இயற்கை சீற்றம் எது?


