News October 6, 2025

BREAKING: அப்போலோவுக்கு சென்றார் அன்புமணி

image

பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை கேட்டவுடன் சற்றுமுன் அப்போலோவுக்கு நேரில் சென்ற அன்புமணி, ராமதாஸிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Similar News

News October 6, 2025

ICU-வில் இருக்கிறார் ராமதாஸ்: அன்புமணி

image

பாமக நிறுவனர் ராமதாஸ் பரிசோதனைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதாக கூறிய அவர், இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் சொன்னதாக தெரிவித்தார். மேலும், ராமதாஸ் ICU-வில் இருப்பதால் அவரை பார்க்கமுடியவில்லை எனவும், 2 நாள்கள் ஹாஸ்பிடலில் ஓய்வெடுத்துவிட்டு வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 6, 2025

விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் ₹1000 உயர்வு..

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளியின் விலை ₹1 உயர்ந்து ₹166-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாளில் மட்டும் வெள்ளி விலை ₹5 ஆயிரம் அதிகரித்துள்ளது. விலை குறையும் என்று எதிர்பார்த்த நகை பிரியர்கள், விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News October 6, 2025

ஹாஸ்பிடல் தீ விபத்தில் 8 பேர் பலி: மோடி இரங்கல்

image

ஜெய்ப்பூரில் உள்ள ஹாஸ்பிடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஏற்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தோர் விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!