News August 28, 2025
BREAKING: வெள்ளத்தில் சிக்கி ஒரு குடும்பமே அழிந்தது

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் கனமழை காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை காரில் கடக்க முயன்றபோது, தமிழகத்தை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர், மனைவி, 2 மகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Similar News
News March 5, 2026
முகத்தில் இத தடவுறீங்களா? ALERT!

முகத்தில் எலுமிச்சை சாறை தடவுவதால் நன்மை கிடைப்பதை விட சருமத்துக்கு பல தீங்குகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிம்பிள்ஸை அதிகமாக்கும், முக்கியமாக சருமத்தின் pH சமநிலையை சீர்குலைக்கிறதாம். எனவே எலுமிச்சை சாறை முகத்தில் தடவுவதற்கு பதிலாக அதனை குடித்தால் நன்மை கிடைக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
News March 5, 2026
இன்று நிதிஷ்குமார், நாளை EPS.. தேஜஸ்வி எச்சரிக்கை

கூட்டணிக் கட்சிகளை ஹைஜாக் செய்து அழிப்பதே, பாஜகவின் வழக்கம் என்று RJD தலைவர் தேஜஸ்வி விமர்சித்துள்ளார். நிதிஷ்குமாரின் கட்சியை BJP அபகரித்துவிடும் என தேர்தலுக்கு முன்பே சொன்னேன்; இன்று நடந்துவிட்டது. OBC ஒருவரை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக வைத்துக்கொண்டு, RSS ஆட்கள்தான் பிஹாரை ஆள்வர். மகாராஷ்டிராவில் சிவசேனா, பிஹாரில் ஜனதா தளத்துக்கு நேர்ந்ததுதான் அதிமுகவுக்கும் (EPS) நடக்கும் என எச்சரித்துள்ளார்.
News March 5, 2026
விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு அரசு அறிவிப்பு

சனிப்பெயர்ச்சி (மார்ச் 6), வார விடுமுறை நாள்களையொட்டி நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல வேண்டுமா? உங்களுக்காகவே அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் இப்போதே டிக்கெட் புக் பண்ணுங்க!


