News April 11, 2025
BREAKING: அமித்ஷா, இபிஎஸ் மீண்டும் சந்திப்பு

சென்னை கிண்டியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மீண்டும் சந்தித்தார். டெல்லியில் அண்மையில் 2 பேரும் சந்தித்த நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி அமைக்கலாம் என தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது 2வது முறையாக இருவரும் சந்தித்துள்ளனர். சிறிது நேரத்தில் 2 கட்சிகளும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 22, 2026
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது வரி இல்லை: டிரம்ப்

டிரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விதித்த வரிகள் குறித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். நான் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்து, கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான ஒரு எதிர்கால ஒப்பந்தக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் நல்லது. ஐரோப்பிய நாடுகள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது என்று கூறினார்.
News January 22, 2026
போராட்டம் தொடரும்.. ஆசியர்கள் திட்டவட்டம்

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு 14-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், தங்களது கோரிக்கையை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முரளி, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
சிலிர்க்க வைக்கும் கீழடி பெருமை

கீழடியின் பெரும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராமகிருஷ்ணன் மதுரை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர், இந்திய துனை கண்டத்திலேயே 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடு தான். ஆனால், இதை யாரும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறினார். மேலும், கீழடி என்றாலே சிலர் நடுங்குவதாக பேசியுள்ளார்.


