News September 6, 2025
BREAKING: விஜய் உடன் கூட்டணி? TTV தினகரன் பதில்

NDA கூட்டணியில் இருந்து விலகியது, 4 மாதங்களாக நிதானமாக யோசித்து எடுத்த முடிவு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனப் பேசியதால் அவருடன் கூட்டணி என சிலர் பேசுவது தவறானது என்றார். தேர்தல் கூட்டணி விவகாரத்தை நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை என சாடிய அவர், டிசம்பரில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
Similar News
News September 6, 2025
வங்கி EMI தொகை குறைந்தது.. மகிழ்ச்சி அறிவிப்பு

கடனுக்கான வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகள்(0.10%) குறைக்கப்பட்டுள்ளதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. இதனால், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் ஓராண்டு கால MLC வட்டி விகிதம் 9.55%-ல் இருந்து 9.45% ஆக குறைகிறது. 1, 3, 6 மாத கால கடன்களுக்கான வட்டி 9.30 – 9.45% வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பயனர்களுக்கு EMI தொகை குறைய உள்ளது.
News September 6, 2025
தினேஷ் கார்த்திக்கின் தி பெஸ்ட் டி20 லெவன்

இந்தியாவின் சிறந்த டி20 அணியின் பட்டியலை தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார். ஜூனியர் முதல் சீனியர் வரை அனைவரையும் கலந்து பக்காவான அணியை அவர் தேர்வு செய்துள்ளார். இதில்
அபிஷேக் சர்மா, ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்ட்யா, தோனி, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்குமார் உள்ளனர். உங்களுடைய பெஸ்ட் 11 என்ன?
News September 6, 2025
மதராஸி ஒரு பக்கா கமர்ஷியல் படம்: ஷங்கர் பாராட்டு

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், தியேட்டரில் கொண்டாடக்கூடிய பல அம்சங்களுடன் உருவான பக்கா கமர்ஷியல் படம் ‘மதராஸி’ என ஷங்கர் பதிவிட்டுள்ளார். அனைத்து புள்ளிகளையும் முருகதாஸ் சரியாக இணைந்துள்ளதாக பாராட்டிய அவர், ஆக்ஷன் ஹீரோவாக SK கலக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மதராஸி தீனி போட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.