News April 15, 2025
BREAKING: மே 2-ல் அதிமுக செயற்குழு கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 2-ம் தேதி கூடுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இக்கூட்டம் நடக்கவுள்ளது. பாஜக உடன் கூட்டணி விவகாரம், கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 17, 2026
நாமக்கல் மக்களே உடனே செக் செய்யவும்!

நாமக்கல் மக்களே, இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் SIR பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனே உங்களின் பெயர், வரிசை எண், தொகுதி என அனைத்தும் SMS-ல் வரும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 17, 2026
24 மணி நேரமாக சைலண்டாக இருக்கும் டிடிவி

NDA கூட்டணியில் அமமுக இணைய தயக்கம் காட்டுவதாக செய்தி வெளியான, அடுத்த ஒரு மணி நேரத்தில் TTV விளக்கமளித்திருந்தார். ஆனால், நேற்று NDA கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பதாகையில் <<18840967>>போட்டோ <<>>இடம்பெற்றது குறித்து, 24 மணி நேரமாகியும் இதுவரை அவரது தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், EPS தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க TTV முடிவு எடுத்துவிட்டாரா என கேள்வி எழுந்துள்ளது.
News January 17, 2026
நாளை தை அமாவாசை.. வீட்டில் கட்டாயம் இதை செய்யுங்க

*தர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி சென்று முன்னோரின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சார்த்த வேண்டும். *முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். *முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். *வீட்டில் தெய்வம் சம்பந்தமான பூஜைகளை தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்.


