News March 4, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்?

image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியான பதிவில் #DMDKforTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லவில்லை என இபிஎஸ் பேசியிருந்தார். இந்நிலையில், சத்தியம் வெல்லும், நாளை நமதே எனக் குறிப்பிட்டு #DMDKforTN, #DMDKfor2026 என்ற ஹேஷ்டேக் பதிவிடப்பட்டுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News March 4, 2025

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்: நயன்

image

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று, அது என்னை மட்டுமே குறிக்கிறது. பட்டங்கள், விருதுகள் மதிப்புமிக்கவை, சில நேரங்களில் அவை தொடர்பில் இருந்து பிரிக்கக்கூடும். எனவே, நயன் என பெயரை மட்டும் குறித்து அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

கோபம் வந்தாலும் ரமலானுக்கு வாழ்த்து சொல்வோம்: உதயநிதி

image

இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களின் சொந்த வீடு போல் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு இன்னல்கள் வரும்போதெல்லாம் முதலில் துணையாக நிற்பது திமுகதான் எனக் கூறிய அவர், ரமலானுக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலருக்கு கோபம் வரும். அப்படி வந்தாலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார்.

News March 4, 2025

பிரபல பாடகியின் கணவர் காலமானார்

image

அமெரிக்காவின் மிகப் பிரபலமான நாட்டுப்புற பாடகி டாலி பார்ட்டன். தன் கணவர் கார்ல் டீன் காலமானதாக அறிவித்துள்ள டாலி, ‘நானும் கார்லும் ஒன்றாக வாழ்ந்த ஆண்டுகள் அற்புதமானவை. 60 ஆண்டுகள் நாங்கள் பகிர்ந்துகொண்ட அன்பை சொல்ல வார்த்தைகள் போதாது’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கார்லின் மறைவுக்கு உலகம் முழுவதும் திரை, கலையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!