News March 29, 2024

BREAKING: அதிமுக அறிவிப்பு

image

தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தருமபுரி, மாதவரம் மூர்த்தி – சென்னை வடக்கு, நாஞ்சில் வின்செண்ட் – கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் – காஞ்சிபுரம், அய்யாத்துரை பாண்டியன் – தென்காசி ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 24, 2025

குமரி: மாணவிக்கு நேர்ந்த கொடுமை., இருவர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அஜித் (21) சஜின் (25) ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மாணவி மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலைக்கு முயன்றதால் இச்சம்பவம் வெளியே தெரியவந்தது என விசாரணையில் வெளிவந்துள்ளது. இதில் தொடர்புடைய இரண்டு பேரும் தஞ்சாவூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

News November 24, 2025

இந்து கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள்.. பாஜக எதிர்ப்பு

image

ஜம்மு & காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 42 முஸ்லிம், 8 இந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, VHP, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளன. ஆனால், நீட் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

News November 24, 2025

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

தங்கம் விலை இன்று(நவ.24) சவரனுக்கு ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,520-க்கும், சவரன் ₹92,160-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 30 டாலர்கள் குறைந்து 4,053 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

error: Content is protected !!