News March 24, 2024

BREAKING: அமமுக வேட்பாளர் அறிவிப்பு

image

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில், செந்தில் நாதன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி தொகுதியில் அமமுக, மதிமுக, அதிமுக இடையே போட்டி நிலவுகிறது.

Similar News

News January 13, 2026

பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் 1,03,123 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ₹85 – ₹625 வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ₹3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News January 13, 2026

கூட்டணிக்காக பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை: TTV

image

NDA கூட்டணியில் இணையலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் <<18846855>>TTV <<>>இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் அமமுகவுக்கு எந்த அழுத்தமோ, தயக்கமோ, குழப்பமோ இல்லை என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று உறுதிப்படுத்திய TTV, கூட்டணிக்காக பாஜக அழுத்தம் கொடுப்பதாக பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News January 13, 2026

2 பொருள் போதும்; கெமிக்கல் இல்லாத கண் மை ரெடி

image

பாதாம், நெய்யை வைத்து வீட்டிலேயே இயற்கையான, கண்மையை தயாரிக்கலாம். ➤ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி திரிவைத்து விளக்கை ஏற்றுங்கள் ➤அந்த விளக்கிற்குள் 2 பாதாம் பருப்புகளை வைக்கவும் ➤விளக்கிற்கு 2 பக்கங்களிலும் டம்ளரை வைத்து, அந்த டம்ளரின் மேல் ஒரு தட்டை வைக்கவும் ➤விளக்கின் தீபம் தட்டில் படுமாறு வைக்க வேண்டும் ➤தட்டில் படரும் கரியை எடுத்து, அதில் நெய் சேர்த்து கண்மையாக பயன்படுத்தலாம். SHARE.

error: Content is protected !!