News November 20, 2025

BREAKING: 9 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. TN-ல் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சென்னை, குமரி, நெல்லை, திருவள்ளூரில் மிதமான மழையும் பெய்யும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News November 21, 2025

நாளை உருவாகிறது புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

image

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 25-ம் தேதி வரை டெல்டா, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(நவ.21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழையா?

News November 21, 2025

FLASH: பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

image

இன்று அதிகாலை பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 135 கி.மீ., ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் சந்திக்கும் உலகின் மிகவும் நில அதிர்வுள்ள மண்டலங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சில பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

News November 21, 2025

பிஹார் பாணியில் TN-ல் கூட்டணி ஆட்சி: கிருஷ்ணசாமி

image

தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் பிஹாரை பார்த்து பாடம் கற்க வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியும், பூரண மதுவிலக்கும் தான் 2026 தேர்தலில் முக்கியமானதாக இருக்கும்; ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டினால் தான் விடிவு காலம் பிறக்கும்; கூட்டணி ஆட்சி, மதுவிலக்கு என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சியுடன் தான் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!