News December 30, 2024
BREAKING: 75 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

75 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 5 IAS அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையிலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு முதன்மை செயலாளர் நிலையிலான பதவி, 19 பேருக்கு செயலாளர் நிலை பதவி, 18 பேருக்கு கூடுதல் செயலாளர் நிலை பதவி, 17 பேருக்கு இணை செயலாளர் நிலையிலான பதவி, 11 பேருக்கு இணை செயலாளர் நிலையிலான பதவி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
12 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மழை நேரத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
News September 10, 2025
கால்சியம் சத்து நிறைந்த டாப் 5 உணவுகள்

வலுவான எலும்புகளுக்கு கால்சியம் சத்து மிக அவசியம். நாள் ஒன்றுக்கு நாம் 1,000 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொள்வது அவசியம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்புகள் வலு இழக்கும். கால்சியம் சத்து கிடைக்க பால் குடிக்க வேண்டும் என்பார்கள். வேறு சில உணவுகளிலும் கால்சியம் சத்து நிறைந்திருக்கின்றன.
News September 10, 2025
Asia Cup: இன்று இந்தியா Vs UAE மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா – UAE அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா கோப்பையை தக்க வைக்கும் முனைப்போடு களம் இறங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி UAE அணியை விட பேட்டிங், பவுலிங்கில் வலுவாக உள்ளது. எனவே இந்தியா வெற்றியுடன் ஆரம்பிக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். துபாயில் நடக்கும் இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.