News September 27, 2025
BREAKING: விஜய் பிரச்சாரத்தில் 4 பேர் உயிரிழப்பு?

கரூர், வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் கரூர் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் GH-க்கு விரைந்துள்ளார்.
Similar News
News September 28, 2025
கரூர் துயரம்: கனிமொழி இரங்கல்

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனிமொழி MP இரங்கல் தெரிவித்துள்ளார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 36 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், CM போர்க்கால அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.
News September 28, 2025
கரூரில் பலியானோர் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்

கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 36 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும், படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ₹1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News September 27, 2025
நடப்பாண்டு நிகழ்ந்த கூட்ட நெரிசல் மரணங்கள்!

கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று 2025-ம் ஆண்டில் இந்தியாவில், இதுவரை பல்வேறு பொது இடங்களில் கூட்ட நெரிசலால் ஏராளமான துயரமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. அவை என்ன நிகழ்வுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். கரூரில் இதுவரை 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 48 பேர் சிகிச்சையில் உள்ளனர்.