News April 14, 2024
BREAKING: மேலும் 3 புல்லட் ரயில்கள்

அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரயில் போல, தென்னிந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மேலும் 3 புல்லட் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மோடி, வட இந்தியாவுக்கு ஒரு புல்லட் ரயில், தென்னிந்தியாவுக்கு ஒரு புல்லட் ரயில், கிழக்கு இந்தியாவுக்கு ஒரு புல்லட் ரயில் விடப்படும் என்றார். சர்வே பணி விரைவில் தொடங்கும் என்றும் மோடி கூறினார்.
Similar News
News September 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 9, 2025
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை: அன்புமணி

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று அவர் X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர்களுக்கு முதற்கட்டமாக நீண்டகால விசாவும், பின்னர் குடியுரிமையும் வழங்க வேண்டும் என மத்திய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News September 9, 2025
உங்களுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கா?

பலருக்கு தூக்கத்தில் பேசும் பழக்கமும், சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் இருக்கும். இதனை கட்டுப்படுத்த முதலில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தை சீராக கடைபிடிக்க வேண்டும். தூங்கும் அறையில் டிவி பார்ப்பது, அலுவல் சார்ந்த வேலைகளை செய்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நலம். தூக்கத்துல பேசுற உங்க ஃப்ரெண்ட்ஸ்-க்கு இதை ஷேர் பண்ணுங்க!