News December 5, 2024
BREAKING: இந்த மாவட்டத்தில் 3 நாள் விடுமுறை

முதல் மாவட்டமாக விழுப்புரத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை (வெள்ளி), சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 3 நாள் தொடர் விடுமுறைக்கு பின், டிச.9 (திங்கள்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
SC-ன் கருத்து வேதனைக்குரியது: ஸ்டாலின்

கரூர் வழக்கில் CBI விசாரிக்கவுள்ளதை கண்காணிக்கும் குழுவில் தமிழக IPS அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என SC உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த கருத்து தமிழக மக்களுக்கே வேதனைக்குரிய ஒன்றாக உள்ளதாக CM ஸ்டாலின் கூறினார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய அவர், இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று நிச்சயமாக SC-ஐ அணுகுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
டிகிரி இருந்தால் போதும்; அரசு வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்திய அஞ்சல் வங்கியில் 348 Executive பணியிடங்கள் காலியாக உள்ளன. இளங்கலை பட்டம் பெற்ற 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ₹30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. அக்.29-ம் தேதிக்குள் <
News October 15, 2025
மீண்டும் ‘அருணாச்சலம்’ காம்போ?

ஆக்ஷன் படங்களிலேயே தொடர்ந்து நடிக்கும் ரஜினி, விரைவில் காமெடியிலும் அசத்துவார் போலும்! ‘ஜெயிலர் 2’ படத்திற்கு பிறகு, ரஜினிகாந்தை சுந்தர்.சி இயக்குவார் என்ற தகவல் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கமலுடன் இணைவதற்கு முன், இந்த படம் உருவாக இருக்கிறதாம். ஏற்கெனவே, இவர்களின் காம்போவில் வெளியான ‘அருணாச்சலம்’ படம் மாபெரும் வெற்றி அடைந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த காம்போ வெல்லுமா?